23
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகம், நிர்வாகிகள் இல்லங்களில் சில தினங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அந்த அமைப்பின் நிர்வாகிகள் நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மூத்த தலைவர்களின் ஒருவரும் கேரள எம் எல் ஏவுமான எம்.கே முனீர் கூறுகையில், பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு இளைஞர்களை தவறாக பயன்படுத்தி வருவதாகவும், இதன் காரணமாக இந்திய அரசு அவ்வியக்கத்தை தடை செய்துள்ளனர் என்றார்.
இந்த தடையை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.