தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் ஒன்றாம் கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட போதை எதிர்ப்பு பேரணியை மாவட்ட தலைவர் ராஜிக் அகமது துவக்கி வைத்தார்.
தக்வா பள்ளிவாசல் அருகில் இருந்து துவங்கிய இப்பேரணி பேருந்துநிலையம் வரை நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன்,மாவட்ட பொருளாளர் அப்துல்ஹமீது,மாவட்ட துணைதலைவர் வல்லம் ஜாபர், மாவட்ட துணைச் செயலாளர்கள் வல்லம் அப்துல்லா, ஆவணம் ரியாஸ் ,எம்.அஷ்ரப் அலி, இத்ரிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநிலப் பேச்சாளர் பா.அப்துர்ரஹ்மான் சிறப்புரையாற்றினார். கிளைத்தலைவர் நவாப்ஷா நன்றி உரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கிளை 1 சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து கொண்டிருக்கிற போதை எதிர்ப்பு பேரணி கூட்டத்தின் சார்பாக கஞ்சா போன்ற போதை பொருட்கள் புழக்கத்தை தீவிரமாகக் கண்காணித்து ,அதை முற்றிலும் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளுவதோடு,அதற்கு துணையாய் இருக்கின்ற அரசு அதிகாரிகளை நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.