அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் கடைவீதியில் சிஐடியு சார்பாக மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கேரளாவில் இறந்து போன மீனவருக்கு 25 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருவருக்கு அரசு வேலையை அறிவித்துள்ளது அதேபோல் தமிழக அரசும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்,காணாமல் போன மீனவர்களை போர்கால அடிப்படையில் உடனடியாக மீட்கவேண்டும் ,அனைத்துகட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் இன்று(15.12.2017) காலை 10:30மணிக்கு பெரியண்ணன் தலைமையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் சங்க கூட்டமைப்பு மாநில பொதுசெயலாளர் CR செந்தில்வேல்,மாநில செயலாளர் K.M லிங்கம்,சிஐடியூ மாவட்ட செயலாளர் C.ஜெயபால்,சிபிஎம் மாவட்ட செயற்குழு R.C பழனிவேல்,தஞ்சை மாவட்ட செயலாளர் மீன்பிடி தொழிற் சங்கம் S.சுப்ரமணியன் ஆகியோர் கண்டண உரையை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர்.