தஞ்சை தெற்கு மாவட்ட திமுக கழக செயலாளர் பட்டுக்கோட்டை தொகுதி மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி
திமுகழக தலைமையால் தமிழகத்தில் பெரும்பான்மையான மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டது தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கா அண்ணாதுரை அவர்கள் அறிவிக்கப்பட்டார்கள்
மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட அண்ணாதுரை அவர்கள் பட்டுக்கோட்டை தொகுதி மக்களை சந்திப்பதற்காக அக்டோபர் 5 பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் முகத்தில் இருக்கும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மக்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை தொகுதி மக்களை அழைத்து இருந்தார்கள்
அதன் பேரில் புதிய மாவட்ட பொருளாளராக பதவி ஏற்ற முன்னாள் சேர்மன் அஸ்லம் மற்றும் நகர திமுக நிர்வாகம் சார்பில் ஏராளமான அதிரையர்கள் பட்டுக்கோட்டை சென்று புதிய மாவட்ட செயலாளரை வாழ்த்தினர்.
இந்த நிகழ்வில் அதிராம்பட்டினம் நகர சேர்மன் MMS. தாஹிரா அம்மாள் அப்துல் கறிம், நகர திமுக செயலாளர் இராம குணசேகரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர்.
சிறப்பு செய்தியாளர் : அஸ்கர்