தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(15/12/2017) மாலை சுமார் 5மணியளவில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கும் முன்பு கொள்ளையர்களால் சுட்டு கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்த தமிழக காவல் துறை அதிகாரி வீர பாண்டியன் அவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இக்கண்டன ஆர்பாட்டத்திற்க்கு அதிரை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் நல்லதுரை கண்டன உரையாற்றினார்.
இந்த இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் பாசரை A.J.ஜியாவுதீன் அவர்கள் கலந்துகொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்…
1).ஓகி புயலால் பெரும் பாதிப்புள்ளாகிய குமரி மாவட்டத்தை இயற்கை பேரிடர் மாவட்டமாக அறிவிப்பு செய்யுமாறும்.
2).கடலில் மிதக்கும் கடைசி மீனவரை மீட்க்கும் வரை துரிதோடு செயல்பட வேண்டும்.
3).குமரி மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கு.
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.