Home » அதிரை: தேங்கை சரபுதீன் மிஸ்பாகிக்கு, சீதக்காதி அறகட்டளை, இலக்கியத்திற்கான விருது வழங்கி கெளரவிப்பு !

அதிரை: தேங்கை சரபுதீன் மிஸ்பாகிக்கு, சீதக்காதி அறகட்டளை, இலக்கியத்திற்கான விருது வழங்கி கெளரவிப்பு !

by
0 comment

சென்னை கிரசண்ட் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற சமூக நல்லிணக்க, விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

சீதக்காதி அறகட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு இக்காலத்திற்க்கு நல்லிணக்கம் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து விளக்கமாக உரையாற்றினார்.

இவ்விழாவில் சமூகத்திற்கு தொண்டாற்றிய பலருக்கும் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அதன்பேரில் அதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரசாவின் பேராசிரியர் மொளலானா தேங்கை சரபுதீன் மிஸ்பாகி ஹஜரத்திற்க்கு ஷெய்கு சதக்கத்துல்லா அப்பா இலக்கிய பரிசு மற்றும் கேடயம் வழங்கி கவுரவிக்கபட்டது.

இந்த நிகழ்வில், பீட்டர் அல்போன்ஸ், விசிக இஸ்லாமிய சனநாயக பேரவை அப்துல் ரஹ்மான், ஊடகவியலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter