
அதிரை தெருக்களில் கொட்டப்படும் குப்பைகளை கிளறி மாமிஷங்களை உண்டு வளரும் தெருநாய்கள், அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. குறிப்பாக பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை எண்ணி பெற்றோர்கள் ஓர்வித அச்சத்துடனே உள்ளனர். மேலும் இருசக்கர வாகனங்களில் பயணிப்போரும் தெருநாய்களை கண்டு அஞ்சி ஒதுங்க கூடிய சூழலையும் காண முடிகிறது.
இந்த தெருநாய்களை தற்போதே அதிரை நகராட்சி கட்டுபடுத்தாத பட்சத்தில் வெயில் சுட்டெரிக்கும் சமயங்களில் தெருநாய்கள் வெறிபிடித்து சாலைகளில் செல்வோரை கடித்து குதறும் அச்சுறுத்தல் உருவாகும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மாமிஷம் உள்ளிட்ட கழிவுகளை சாலைகளில் கொட்டாமல் வீடு தேடி வரக்கூடிய தூய்மை பணியாளர்களிடம் பொதுமக்கள் ஒப்படைக்க வேண்டியது கடமையாகும்.