அதிரை எம்.எம்.எஸ் குடும்பத்தினர் தமிழக அரசியலும் அரசு துறையிலும் செல்வாக்குடன் இருந்து வருகின்றனர். இதனிடையே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பஷீர் அகமது கடந்த நவம்பர் மாதம் 5ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து பல்வேறு அரசுத்துறை உயர் அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் அவரது குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறினர்.
இந்நிலையில் அதிரைக்கு வந்த த.மா.கா கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், எம்.எம்.எஸ் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறினார். அப்போது பேசிய அவர், அதிரை எம்.எம்.எஸ் குடும்பமும் மூப்பனார் குடும்பமும் வேறுவேறு அல்ல. இரண்டும் ஒரே குடும்பம் என உருக்கமாக தெரிவித்தார். மேலும் பஷீர் அகமதுவின் மறைவு தமிழ் மாநில காங்கிரஸுக்கு பெரும் இழப்பு என சுட்டிக்காட்டிய ஜி.கே.வாசன், எம்.எம்.எஸ் குடும்பத்தினர் தங்களின் முன்னோர்கள் போல் அரசியல் பணியை தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.