31
அதிரையை சார்ந்த பொறியியல் பட்டதாரியான ரியாஸ், சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். வார இறுதி நாட்களில் அந்நாட்டின் ராயல் MCC அணிக்காக விளையாடுகிறார்.
இந்நிலையில் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் MCC அணி பாகிஸ்தானியர்களின் தஸ்லியா சிசி அணியை எதிர்க்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த MCC அணி 194 ரன் சேர்த்தது. அதை தொடர்ந்து தஸ்லியா அணி விளையாடியது. அப்போது ரியாசின் சாதுர்யமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 98 ரன்னில் தஸ்லியா சுருண்டது.
இந்த போட்டியில் அதிரை ரியாஸ் 5 விக்கெட்டை வீழ்த்தினார். இதில் ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும். இதனால் அதிரை சிட்னி அணி வீரர் ரியாஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.