89
அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகம் எதிர்ப்புறம் கழிவு நீர் கால்வாய் ஒன்று திறந்த நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த மாடு ஒன்று திடீரென சாக்கடையில் விழுந்துள்ளது.
இதனையடுத்து அவ்வழியாக சென்று கொண்டிருந்த சமிக ஆர்வலர் ரஜபு முகைதீன் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார் தகவலில் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மாட்டை மீட்டனர்.