86
அதிரையில் யாசகம் கேட்டு வரும் சில பெண்கள் வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டி வருகின்றனர். இதனிடையே ஆஸ்பத்திரி தெருவில் வீடு ஒன்றில் பெண் ஒருவர் யாசகம் கேட்டு சென்றுள்ளார். அப்போது குடிக்க தண்ணீர் தருமாறு கேட்ட அந்த பெண், உரிமையாளர் தண்ணீர் எடுக்க சென்ற சில நிமிட இடைவெளியில் அங்கிருந்த பணப்பையை திருடியதாக கூறப்படுகிறது. தண்ணீர் குடித்துவிட்டு அந்த பெண் சென்ற நிலையில், டேபிலில் இருந்த பணப்பை காணாமால் போனதை கண்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். எனவே யாசகம் கேட்டு வரும் அறிமுகமில்லாத நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்காமல் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.