
அதிரையில் நிலவி வரும் மின் தட்டுப்பாட்டை போக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை அடுத்து அப்போதைய அதிமுக அரசு 110KV துணை மின் நிலையம் அமைக்க ஒப்புதல் வழங்கியது.
ஏட்டளவில் மட்டுமே இருந்த இந்த திட்டத்தை திமுக அரசு செயல்வடிவம் கொடுக்க தீவிரம் காட்டியது,இதனிடையே நகராட்சியாக தரமுயற்த்தப்பட்ட அதிரைக்கு போதுமான கட்டமைபு பணிகளை முடுக்கிவிட்டு பணிகள் நடந்து வருகிறது.
துணை மின் திட்டத்தை விரைவாக செயல்படுத்த நகர்மன்ற தலைவர் MMS தாஹிரா அம்மாள் அப்துல் கறிம் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் மின்சார துறை அமைச்சரை நேரில் சந்தித்து 110KV துணை மின் நிலையத்தை விரைந்து செயல்படுத்த போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டு கொண்டனர்.
இதனடிப்படையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் க. அண்ணாத்துரை இத்திட்டம் விரைந்து செய்ல்படும் என அமைச்சர் கூறியதை சுட்டி காட்டினார்.
இந்த நிலையில் 110KV துணை மின் நிலைய அடிக்கல் நாட்டும் பணி இன்று காலை அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது.
இதில் சிற்ப்பு விருந்தினராக க.அண்ணாத்துரைMLA கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.
முன்னதாக நகர தலைவர் தாஹிரா அம்மாள், அப்துல் கறிம் அனைவரையும் வரவேற்றனர்.
இந்த நிகழ்வில் நகராட்சி துணைத் தலைவர் இராம குணசேகரன் ,மாநில கலை இலக்கிய பண்பாட்டு பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம் மாவட்ட பொருளாளர் அஸ்லம், வார்டு உறுப்பினர்கள், மின்வாரிய அதிகாரிகள்,ஊழியர்கள்,பொதுமக்கள் வெகுவாக கலந்து கொண்டனர்.


