அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிரை அருகே ஈசிஆர் சாலையில் கார் வாய்க்காலில் விழுந்து விபத்து.இருவர் படுகாயம்.
மதுரையிலிருந்து திருவாரூர் செல்லும் போது அதிரை ரெயில்வே கேட் அருகில் உள்ள வாய்க்காலில் ஓட்டுனரின் கட்டுபாடின்றி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. வாகனத்தில் பயணம் செய்த இருவருக்கு காயம்,இருவரும் பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவ இடத்திற்கு வருகை தந்து அதிரை காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.