
அதிரையில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் அங்கும் இங்குமாக திரிந்து வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி பயணப்பட்ட கார் ஒன்று அதிரை கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றபோது குறுக்கே வந்த மாட்டின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அந்த காரின் முன்பகுதி உருகுலைந்தது. காரில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். ஆனால் படுகாயமடைந்த மாடு பரிதாபமாக உயிரிழந்தது. இதனிடையே சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை நகராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் உயிரையும் கால்நடைகளின் உயிரையும் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.