குஜராத் மாநிலத்தில் உள்ள மாச்சூ ஆற்றின் குறுக்கே கேபிள் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 60 பேர் பலியாகி உள்ளனர்.
பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சத்பூஜைக்கு சென்றபோது இவ்விபத்து நடந்ததாகவும், கடந்த 5 தினங்களுக்கு முன் புணரமைப்பு பணிகள் முடிந்து இந்த பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன.
வார விடுமுறை தினம் மற்றும் திருவிழா என்பதால் அதிகமான மக்கள் திரண்டனர். இதனால் பாரம் தாங்காமல் இவ்விபத்து நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.