அதிரையை அடுத்த ஏரிப்புறக்கரை ஊராட்சி 1வது வார்டு கவுன்சிலர் ஜாஸ்மின் பானு கமாலுதீனின் தீவிர முயற்சியால் பிலால் நகர் ரயில்வே கேட் முதல் காலேஜ் முக்கம் வரையிலான வடிகால் வாய்க்காலை தூர்வாரும் பணிகள் நேற்று 02.11.2022 அன்று தமிழக அரசின் உள்ளாட்சி துறையால் துவங்கியதுடன் புதிய பாலத்திற்கான கோரிக்கையும் ஏற்கப்பட்டது.
வருடந்தோறும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பிலால் நகரின் துயரங்கள் குறித்து பல்வேறு உயர் அதிகாரிகள், முதலமைச்சரின் தனிப்பிரிவு போன்றவற்றிற்கு தொடர் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டதை தொடர்ந்து இன்று உள்ளாட்சி துறையின் ஐ.ஏ.எஸ் ரேங்க் உயர் அதிகாரிகள், ஒன்றிய பெருந்தலைவர் பழனிவேலு, ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சக்தி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரடியாக பிலால் நகரில் கள ஆய்வு செய்ததுடன் JCB இயந்திரம் மூலம் வாய்க்காலை தூர்வாரும் பணிகளை துவக்கி வைத்தனர்.
தூர்வாரும் பணிகள் நாளையும் தொடர்ந்து நடைபெறவுள்ளதுடன் செடியன்குளம் வாய்க்கால் ஆக்கிரமிப்பு பிரச்சனைகள் தொடர்பாகவும் தொடர் முயற்சிகளை கவுன்சிலர் மேற்கொண்டு வருகிறார்.
மேலும் கவுன்சிலர் ஜாஸ்மின் பானு கமாலுதீனின் கோரிக்கையை ஏற்று பிலால் நகருக்கு உயர்மட்ட பாலம் அமைத்துத் தருவதற்கான அளவீடுகளையும் உள்ளாட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.






