தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் இன்று(16/12/2017) மதியம் 1:30மணிமுதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிரை கடற்கரை தெரு 8 மற்றும் 9வது வார்டு பகுதியில் இன்று வரை ஒரு அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்தும், கடற்கரை தெருவில் உள்ள தொடக்கப்பள்ளி அருகாமையில் திறந்து கிடக்கும் மனித கழிவு தொட்டியை உடனடியாக மூட கோரியும் இந்த உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றுது.
இந்த போராட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
இதற்க்கு நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் அன்று போராட்டம் நடத்தியவர்கள் கூறினார்.
இதனையடுத்து, அதிரை பேரூராட்சி சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கடிதம் அளிக்கப்பட்டது.
மேலதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அவர்கள் கலைந்து சென்றனர்.