தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புத் தேர்தல் கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்திலிருந்து கிளை முதல் மாவட்டம் வரை நடைபெற்றது . இதற்காக எம்.எச் . ஜீப்ரி காசிம், பி.எம்.ஆர் சம்சுதீன் மற்றும் தாஹிர் பாஷா ஆகியோரை கொண்ட தலைமைத் தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது . 36 தேர்தல் ஆணையாளர்கள் இதற்காக நியமிக்கப்பட்டார்கள் .
இத்தேர்தலின் இறுதி கட்டமாக தமுமுக தலைவர், பொதுச் செயலளார் மற்றும் பொருளாளர் ஆகிய பொறுப்புகளுக்கு நவம்பர் 5ம் தேதி திருச்சி சமயபுரம் எமரால்ட் பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தலைமை பொதுக் குழுவில் தேர்தல் நடைபெற்றது .
இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவராக பேராசிரியர் எம்.எச்.ஜவாஹில்லாஹ் MLA, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக பேராசிரியர் ஜெ. ஹாஜா கனி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொருளாளராக பொறியாளர் என். ஷஃபியுல்லாஹ் கான், மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளராக ப.அப்துல் சமது MLA, மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளராக கோவை இ.உமர் ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.










