Thursday, March 28, 2024

பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளருக்கு எதிராக புகார்! நீதி கேட்கும் அதிரையர்!!

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டை அடுத்த கரம்பயத்தில் வசித்து வரும் தங்கவேல், தற்போது பாஜகவில் மாவட்ட பொறுப்பில் உள்ளார். இவரிடம் ரியல் ஸ்டேட் தொழிலுக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதிரையை சார்ந்த முகம்மது அப்துல் காதர் ஒரு கோடியே 63 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார். இதனை பெற்றுக்கொண்ட தங்கவேல் பல ஆண்டுகளாகியும் முதலீட்டையும் லாப தொகையையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த முகம்மது அப்துல் காதர், மத்திய மண்டல காவல்துறை தலைவரிடம் தங்கவேலின் மோசடி குறித்து புகார் அளித்திருக்கிறார்.

இதனையடுத்து இந்த புகார் குறித்து வல்லம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிருந்தா நடத்திய விசாரணையில் பண மோசடியில் தங்கவேல் ஈடுபட்டது தெரியவருவதால் மத்திய குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்ய ஆவண செய்யுமாறு தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பரிந்துரை செய்தார். ஆனாலும் இதுவரை இந்த விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனிடையே தஞ்சாவூர் தாலுகா புதுபட்டினத்தில் உள்ள 47 ஏக்கர் விவசாய நிலத்தை தங்கவேல் ஆக்கிரமிப்பு செய்தது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அப்துல் காதர் உட்பட விவசாயிகள் புகார் அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த தங்கவேல், பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முகம்மது அப்துல் காதருக்கு எதிராக புகார் அளித்திருக்கிறார். அதில் கடந்த செப்டம்பர் 20ம் தேதி பட்டுக்கோட்டை பைபாஸ் அருகில் தன்னை அப்துல் காதர் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தங்கவேல் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தான் அன்றைய தினம் பட்டுக்கோட்டை செல்லவே இல்லை என மறுக்கும் அப்துல் காதர், பொய் புகாரில் தன் மீது வழக்குபதிவு செய்ய பட்டுக்கோட்டை காவல்துறை முனைப்பு காட்டியதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், தன்னை மிரட்டிய காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி, உதவி ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் பட்டுக்கோட்டை உட்கோட்டாட்சியர் முன்னிலையில் குற்றவியல் நடைமுறை சட்டம் 107வது பிரிவின் கீழ் வலுக்கட்டாயமாக பாண்ட் எழுதி வாங்கி இருப்பதாக அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிபாளரிடம் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் கம்பம் சாதிக் தலைமையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தங்கவேலுவுக்கு ஆதரவாக செயல்படும் காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி, உதவி ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அப்துல் காதரின் குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...