சென்னை பிலாலியா அரபிக்கல்லூரியும்,பட்டுக்கோட்டை முகைதீன் ஆண்டவர்கள் பெரியபள்ளிவாசல் இணைந்து நவீன பிரச்சனைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ற தலைப்பில் திங்கட்கிழமை (18.12.2018) அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு ஜமாத் தலைவர் ஹாஜி M.A அமானுல்லாB.A தலைமையில்,துணை தலைவர்,செயலாளர்,பொருளாளர், நிர்வாகிகள்,ஜமாத்தார்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.வரவேற்புரை தஸ்தகீர் நிகழ்த்த உள்ளார்.
பள்ளி இமாம்மௌலவி ஹாஜி ஜனாப் P.அய்யூப்கான் மன்பீ அவர்கள் துவக்க உரையை நிகழ்த்தி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்கள்.
பிலாலியா அரபிக் கல்லூரி பட்டவகுப்பு உலமாக்கள் மற்றும் சென்னை,புதுப்பேட்டை மஸ்ஜித் மஹ்மூத் தலைமை இமாம் மௌலவி.அல்ஹாபிழ் அல்ஹாஜ் பீர்முகம்மது பாகவி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.
நவீன காலக்கட்டத்தில் நிகழும் பிரச்சனைகளை மையமாக வைத்து பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றுகிறார்கள்.
பெண்களுக்கும் தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.