105
தமிழகக் கடலோரப் பாதுகாப்புக் குழுமம் சார்பாக ‘சீ விஜில்’ என்ற ஆபரேஷன் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை கடலோரம் உள்ள எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இந்த ‘சீ விஜில்’ ஆபரேஷன் தொடங்கியுள்ளது.
கடல் வழியாக தீவிரவாத ஊடுருவல்களைத் தடுப்பது, சமூக விரோதச் செயல்களைத் தடுப்பது மற்றும் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான ஒத்திகையே இந்த ‘சீ விஜில்’ ஆபரேஷன் ஆகும். அதன்படி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள கடலோரப் பகுதியில் கடலோரப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் அந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். சுமார் 20க்கும் மேற்பட்ட கடலோரப் பாதுகாப்புப் படை வீரர்கள் இதில் ஈடுபட்டனர்.