Home » அதிரைக்கு வருகிறது மெகா திட்டம்! சாதக பாதகம் குறித்து பேசலாம் வாங்க!!

அதிரைக்கு வருகிறது மெகா திட்டம்! சாதக பாதகம் குறித்து பேசலாம் வாங்க!!

by அதிரை இடி
0 comment

நீர்வளத்துறையின் கீழ் பராமரிப்பில் உள்ள கல்லணை கால்வாயில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக பட்டுக்கோட்டை தாலுக்கா ராஜாமடம் கிளைகால்வாய், கிளைவாய்க்கால் மற்றும் ஏரிகளை புனரமைப்பு செய்வது குறித்து மக்களின் கருத்துக்களை கேட்பதற்கான கூட்டம் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெறுகிறது. சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை தலைமையில் நடைபெறும் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் உள்ளிட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter