Home » அதிரை அங்கன்வாடியை புனரமைத்து தருக- 24 வது வார்டு கவுன்சிலர் கடிதம்.

அதிரை அங்கன்வாடியை புனரமைத்து தருக- 24 வது வார்டு கவுன்சிலர் கடிதம்.

by
0 comment

அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதியான ஆறுமா கிடடங்கி தெருவில் இயங்கி வரும் பால்வாடி என்கிற அங்கண் வாடியை புனரமைத்து தர சம்பந்தப்ட்ட துறைகளுக்கு வார்டு உறுப்பினர் மாலிக் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளோ மெத்தனப்போக்காக செயல்பட்டு இந்த கோரிக்கையை கிடப்பில் போட்டு வருகின்றனர்.

இதுகுறித்து 24ஆவது வார்டு உறுப்பினர் அப்துல் மாலிக் கூறுகையில் எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் அங்கண் வாடி மிகவும் சிதிலமடைந்து உள்ளது எனவும் இதில் ஏழை குழந்தைகள் கல்வி பயில்கின்றனர் என்றும் இதனை புனரமைத்து தர சம்பந்தப்பட்ட இலாக்காவை பலமுறை அணுகியும் பலன் ஏதும் இல்லை ஆதலால் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு பதிவு தபால்கள் மூலம் கோரிக்கை விடுக்கிறேன் இதிலும் .அதிகாரிகள் மெத்தன போக்காக இருக்கும் பட்சத்தில் வீரியமான போராட்டத்தை வார்டு மக்களை ஒன்றிணைத்து போராடுவேன் என தெரிவித்து இருக்கிறார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter