அதிரை வண்டிப்பேட்டையிலிருந்து மிலாரிக்காடு வழியாக நடுவிக்காடு வரை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நீண்டகாலமாக சீரமைக்கப்படாமல் இருக்கும் இந்த சாலையை புதிதாக புனரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். மக்களின் கோரிக்கை குறித்து பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரையின் கவனத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளரும் முன்னாள் சேர்மனுமான எஸ்.எச்.அஸ்லம் கொண்டு சென்றார். இந்நிலையில், அந்த சாலையை புனரமைக்க ரூ.2.85கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 2.9கிலோ மீட்டர் வரையிலான இந்த சாலையின் பணி விரைவாக துவங்கும் என தெரிவித்திருக்கும் எஸ்.எச்.அஸ்லம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை உள்ளிட்டோருக்கு சி.எம்.பி லைன் பகுதி மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்.
அதிரை சி.எம்.பி லைன் மக்களுக்கு பிறந்தது விடியல்! ரூ. 2.85கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!!
76
previous post