கத்தாரில் நடக்கும் உலகக் கால்பந்து போட்டியை ஆன்லைனில் காண 50 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
50 ஜிபி டேட்டாவை இலவசமாக பெரும் எண்ணத்தில், இதனை பார்ப்பவர்கள் அந்த லிங்கை உடனே கிளிக் செய்து விடுகிறார்கள். லிங்கை கிளிக் செய்து உள்ளே போனால், இந்த தகவலை 21 பேருக்கு வாட்ஸ் குரூப்புக்கு ஷேர் செய்த பின்னர் உங்களுக்கு 50 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என்ற பேனர் வருகிறது. தகவலை ஷேர் செய்த பின்னர் இலவச டேட்டாவை குறித்து எந்த தகவலும் வருவதில்லை. இதனால் மக்கள் ஏமாந்து போகின்றனர்.
இது போன்ற லிங்க்குள் செல்வதால், உங்களது தனிப்பட்ட தரவுகள், வங்கிகணக்கு தரவுகள் போன்றவை திருடப்பட வாய்ப்பிருப்பதாக இந்திய அரசின் இணைய பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.