அதிரையை சார்ந்த முன்னாள் பேரூர் மன்ற சேர்மன் எஸ்.எச்.அஸ்லம், தற்போது தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளராகவும் மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் இன்று நடைபெற கூடிய அதிரை நகர திமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கான அழைப்பிதழில் அவரது பெயர் இடம்பெறாதது பெரும் சர்ச்சையானது. கட்சியின் உயர் பொறுப்பில் உள்ள அதிரை மண்ணின் மைந்தனின் பெயரை உள்ளூர் அழைப்பிதழில் குறிப்பிடாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய உடன்பிறப்புகள், வெறுப்பு அரசியலை கைவிட்டுவிட்டு அனைவரையும் அரவணைத்து செல்வது தான் நகர செயலாளர் பதவிக்கு அழகு எனவும் விமர்சித்தனர்.
இந்நிலையில் தங்கள் பகுதியில் கட்சிக்கு உழைத்தவர்களின் பெயர்களை மறைக்காமல் செயல்வீரர்களுக்கான அழைப்பிதழில் அச்சிட்டு அனைவரையும் அரவணைத்து செல்கிறார் சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம். அதன்படி மாவட்ட அவைத்தலைவர், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள், இந்நாள் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் எந்தவித சச்சரவுகளுமின்றி சேதுபாவாச்சத்திரம் வடக்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.