அதிரை எக்ஸ்பிரஸ்:- ஆர்கேநகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அதிரை நகர திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு.
வருகின்ற 21.12.2017 அன்று நடைபெறவிருக்கும் ஆர்கேநகர் சட்டமன்ற தொகுதியில் திமுகவின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் மருதுகணேசை ஆதரித்து தஞ்சை மேற்கு மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் அதிரை நகர திமுகவினரும் கலந்துகொண்டனர்.
திருச்சி K.N.நேரு, மாவட்ட அவைத் தலைவர் லண்டண் கோவிந்த ராஜ், அதிராம்பட்டினம் பேரூர் கழக செயலாளர். இரா.குணசேகரன்,மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் பழஞ்சூர் K.செல்வம்,அதிராம்பட்டிணம் பேரூர் கழக துணைச் செயலாளர் A.M.Y,அன்சர்கான் மற்றும் திமுக உறுப்பினர்கள் உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவுகேட்டு ஆர்கேநகர் வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்கள்.