

இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்29/11/2022 அன்று 50-வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக அதிராம்பட்டினம் மற்றும் அதனைச் சுற்றயுள்ள பள்ளிகளுக்கு இடையேயான வினாடி வினா போட்டி ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டது.
இதில் அதிராம்பட்டினம் – அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, அபு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துப்பேட்டை பிரில்லியண்ட் பள்ளி, ஆக்ஸ்போர்ட் பள்ளி, பிரைம் பள்ளி,இக்ரா பள்ளி, ரஹ்மத் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் இமாம் ஷாஃபி பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு தனியாகவும் மாணவிகளுக்கு தனியாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் சிறப்பு மாணவ மாணவிகளே இப்போட்டியினை தொகுத்து நடத்தினர்.
இதில் அறிவியல், சமூக அறிவியல், நடப்பு நிகழ்ச்சிகள், ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குபவர்களின் புகைப்படங்களை கண்டறிதல், பறவை மற்றும் விலங்குகளின் ஒலியினை கண்டறிதல் என ஐந்து வகையான சுற்றுகள் நடைபெற்றன. ஒவ்வொரு சுற்றிலும் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் சிந்தனை வினாக்களாக இருந்தன. இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் விவேகமாகவும் பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யமாகவும் இருந்தது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மேன்மேலும் சிறப்பித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்கள்:
Place | SCHOOL NAME | STUDENT NAME |
I | BRILLIANT MATRIC. HR. SEC. SCHOOL (MUTHUPET) | Jai Harish R |
Mohamed Wasim L | ||
II | ABU. MATRIC. HR. SEC. SCHOOL (PUDHUPATTINAM) | Mohamed Basith J |
Ahamed Ashil D | ||
III | IMAM SHAFI (RAH) MAT. HR. SEC. SCHOOL (ADIRAMPATTINAM) | Mahasin S |
Ameerul Afraz ismail A |
வெற்றி பெற்ற மாணவிகளின் விவரங்கள்:
Place | SCHOOL NAME | STUDENT NAME |
I | IMAM SHAFI (RAH) MAT. HR. SEC. SCHOOL (ADIRAMPATTINAM) | Nadira M |
Afiya A | ||
II | BRILLIANT MATRIC. HR. SEC. SCHOOL (MUTHUPET) | Vinith M |
Fathima A | ||
III | RAHMATH GIRLS MATRIC. HR. SEC. SCHOOL | Hafiza Rahmath M |
Mega Saloni R |