172
திமுக செயற்குழு உறுப்பினரான பழஞ்சூர் செல்வத்தை வர்த்தக அணியின் மாநில துணை தலைவராக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நியமனம் செய்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பிய பழஞ்சூர் செல்வத்தை அதிரை திமுகவினர் நேரில் சந்தித்து கட்சி பணிகள் குறித்து பேசினர். முன்னதாக தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளரும் முன்னாள் சேர்மனுமான எஸ்.எச்.அஸ்லம், நகர முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் சாகுல் ஹமீது, துணை அமைப்பாளர் கிருபா, நூவண்ணா, மஜீது ஆகியோர் பழஞ்சூர் செல்வத்திற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.