Home » உலகத்திலேயே யோகி ஆதித்யநாத்தை போன்ற அயோக்கியரை பார்க்க முடியாது! திமுக மாவட்ட பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம் ஆவேசம்!

உலகத்திலேயே யோகி ஆதித்யநாத்தை போன்ற அயோக்கியரை பார்க்க முடியாது! திமுக மாவட்ட பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம் ஆவேசம்!

by அதிரை இடி
0 comment

பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் பேராவூரணியில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் கா.அண்ணாதுரை எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார், வர்த்தகர் அணி மாநில துணை தலைவர் பழஞ்சூர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய மாவட்ட பொருளாளரும் அதிரை முன்னாள் சேர்மனுமான எஸ்.எச்.அஸ்லம், கடந்த திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய உரை தமிழக மக்கள் தலைவனின் சிந்தனையை பிரதிபலித்ததாக கூறினார். ஒன்றிய பாஜக அரசை அகற்றிவிட்டு நல்லதோர் பிரதமரை தேர்ந்தெடுக்க நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என பேசிய எஸ்.எச்.அஸ்லம், முன்பெல்லாம் பாஜகவை இஸ்லாமியர்கள் மட்டுமே எதிர்த்த நிலை மாறி தற்போது அனைத்து தரப்பினரும் பாஜகவை எதிர்ப்பதாக தெரிவித்தார்.

உலகத்திலேயே உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யனாத்தை போன்ற அயோக்கியரை பார்க்க முடியாது என்றும் ஆவேசமாக பேசினார். இதனிடையே புல்டசரை வைத்துக்கொண்டு எதை இடிக்கலாம், எப்படி குழப்பத்தை ஏற்படுத்தலாம் என யோகி ஆதித்யனாத் சுற்றித்திரிவதாக சுட்டிக் காட்டிய எஸ்.எச்.அஸ்லம், உத்தரபிரதேசத்தில் ஒவ்வொருநாளும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக வெட்டப்பட்டு, எழும்புகள் உடைக்கப்பட்டு படுகொலைகள் செய்யப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

வங்கதேசத்தைவிட மிக மோசமான பொருளாதார நிலைக்கு செல்லும் இந்தியாவை மீட்டெடுக்க வரும் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்திட வேண்டும் எனவும் அவர் திமுக செயல்வீரர்களிடம் சூளுரைத்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter