29
கோல்டன் கிரிக்கெட் கிளப் சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் தொடரில் தமிழகத்தை சேர்ந்த அணிகள் விளையாடின. இதன் இறுதி ஆட்டத்தில் AFC Adirai Friends அணியும் ஃபியூச்சர் 11 அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற அதிரை அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 101 ரன் எடுத்தது. இதனையடுத்து களம் இறங்கிய ஃபியூச்சர் 11 அணியினர் 11 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 103 ரன் எடுத்து வெற்றிபெற்றனர். இதனால் வெற்றிவாய்ப்பை இழந்த அதிரை அணி, 2வது இடத்திற்கான சுழற்கோப்பையை கைப்பற்றியது.