உட்கட்சி பூசலால் மமகவிலிருந்து வெளியேறிய தமீம் அன்சாரி புதிதாக மஜக என்ற பெயரில் கட்சி துவங்கினார். இதனையடுத்து மமகவினருக்கும் மஜகவினருக்கும் இடையே கடும் மோதல்கள் உருவானது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ்வும் மஜக பொதுச்செயலாளர் தமீம் அன்சாரியும் நேருக்குநேர் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கு ஆதாரமாக சமூக வலைதளங்களில் இருவரும் பேசிக்கொள்ளும் விதமான புகைப்படம் வைரலாக பரவிவருகிறது. இதனை வரவேற்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.