Home » வளைகுடா தமிழர்கள் சங்க தஞ்சை மாவட்ட பொறுப்பாளராக டெரிவேர் இப்ராஹிம் நியமனம்.

வளைகுடா தமிழர்கள் சங்க தஞ்சை மாவட்ட பொறுப்பாளராக டெரிவேர் இப்ராஹிம் நியமனம்.

by
0 comment

வளைகுடாவாழ் தமிழர்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பொறுப்பாளராக சமூக ஆர்வலர் டெரிவேர் அதிரை இப்ராஹிம் நியமனம்.. வளைகுடா நாடுகளில் வாழக்கூடிய தமிழர்களுக்கு சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு பல்வேறு சேவைகளை செய்து வரும் “வளைகுடாவாழ் தமிழர்கள் நல சங்கம்” தமிழகத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் சமூக சேவை அமைப்பு ஆகும் .

அதன் நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர் சகோதரர் டாக்டர் நம்புதாளை பாரிஸ் அவர்களால், தஞ்சை மாவட்ட பொறுப்பாளராக சமூக ஆர்வலர் டெரிவேர் அதிரை இப்ராஹிம் நியமனம் செய்து உத்தரவிட்டு இருக்கிறார். இதுகுறித்து பேசிய இப்ராஹிம் வளைகுடா உள்ளிட்ட அயலகங்களில் ஏற்படும் இடர்பாடுகள், உதவிகளை தாம் சார்ந்துள்ள வளைகுடாவாழ் தமிழர்கள் நல சங்கம் நீண்ட நெடிய காலங்களாக செய்து வருகிறது இந்தநிலையில் எனக்கு தஞ்சை மாவட்ட பொறுப்பாளராக ஆக்கிய நிர்வாகிகளுக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் மாவட்டத்திற்கு உட்பட்ட மக்கள் அயலகத்தின் உதவிகளுக்கு தம்மை தயங்காமல் நாடலாம் எனவும் தெரிவித்து இருக்கிறார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter