Wednesday, February 21, 2024

டிச.19 புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட குமரி வருகிறார் பிரதமர் மோடி..!

Share post:

Date:

- Advertisement -

புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தைப் பார்வையிட வரும் டிச. 19 ஆம் தேதி வருகிறார் பிரதமர் மோடி. இதனை தமிழக பாஜக., தலைவர் தமிழிசை உறுதி செய்து செய்தியாளர்களிடம் கூறினார். 
வரும் 19ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் பிரதமர் மோடி, அண்மையில் வீசிய ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிடுகிறார். குமரி மாவட்டத்தில் உள்ள நீரோடி, தூத்தூர் ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட உள்ளதாகக் கூறப்படுகிறது.  

Uploading…
இதை அடுத்து, அந்தப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட கேரளத்தின் திருவனந்தபுரம் மற்றும் தமிழகத்தின் கன்னியாகுமரி பகுதிகளை அவர் பார்வையிட வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இதனிடையே, கன்னியாகுமரி பகுதிக்கு காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்ற ராகுல் அண்மையில் வந்து சென்றதால்தான் பிரதமர் மோடியும் வருகிறாரா என்று கேட்டதற்கு,  ராகுல் காந்தி வந்து சென்றதற்கும் பிரதமர் வருகை தரவுள்ளதற்கும் எத்தத் தொடர்பும் இல்லை  என்று தமிழக பாஜக. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறினார். 
மக்கள் மீதுள்ள அக்கறையினால்தான் பிரதமர் இந்தப் பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரணம் வழங்க தகுந்த மேல் நடவடிக்கை எடுப்பார் என்றும், அவரின் வருகை உறுதியாகியுள்ளது, ஆனால் பயண திட்ட விவரங்கள் தெரியவில்லை.. என்றும் தமிழிசை கூறியுள்ளார். 
முன்னதாக புயல் நேரத்தில், உடனடியாகக் களத்தில் இறங்கி, தனது தொகுதி என்பதாலும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். மேலும், மீனவர்கள் பலர் காணாமல் போன விவகாரத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனைத் தொடர்பு கொண்டு உதவிடக் கோரினார்.அதை அடுத்து, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன் பேரில், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக குமரி மற்றும் திருவனந்தபுரத்துக்கு வந்து, மீனவர்களைச் சந்தித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, கடற்படையினரின் பணிகளை நேரில் இருந்து கவனித்தார். 
இதன் பின்னர், தங்கள் பகுதிகளை முதல்வர் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்று  அந்தப் பகுதி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குமரி மாவட்டத்தின் புயல் பாதித்த பகுதிகளைச் சென்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை அரசு மருத்துவமனை பிணவரை பகுதியை சுத்தம் செய்த IMMK மருத்துவ அணியினர்..!!

அதிராம்பட்டினம் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை...

மரண அறிவிப்பு: ஹாஜிமா முஹம்மது மரியம் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் O.S. சாகுல் ஹமீது அவர்களின் மகளும்,...

பாதையா?? பாடையா?? விழிபிதுங்கும் அதிரையர்கள்! நெடுஞ்சாலை துறை உறக்கம் கலைக்குமா..??

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக அதிக அளவில் தொடர்...

அதிரையில் DIYWA-KAIFA-MILKY MIST இணைந்து தரமான சம்பவம்! நூற்றாண்டுகள் பழமையான குளத்தை தூர்வாரி சாதனை!

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் பல்வேறு...