Home » கேரளாவை கலக்க போகும் அதிரை வீரர்!

கேரளாவை கலக்க போகும் அதிரை வீரர்!

by அதிரை இடி
0 comment

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “தமது கழகத்தை சார்ந்த விளையாட்டு வீரர் M. முகமது நபீல் அவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழக கால்பந்து அணிக்கு கோல் கீப்பராக தேர்வு செய்யப்பட்டு,23.12.2022 முதல் 31.12.2022 வரை கேரளா மாநிலம், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தென் மண்டல பல்கலை கழகங்களுக்கிடையான போட்டிகளில் கோல் கீப்பராக கலந்து கொள்ள இருக்கிறார் என்பதை மிக்க மகிழ்ச்சியோடு அறிவிப்பதுடன் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் சார்பில், M. முஹம்மது நபீல் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதுபோல் நமது கழக வீரர்கள்,நமது கால்பந்து கழக சார்பில் பல இடங்களுக்கு சென்று கலந்து கொண்டு விளையாடி நமது கால்பந்து கழகத்திற்கும் நமது ஊருக்கும் பெருமை சேர்த்து மென்மேலும் வளர வேண்டும் என்றும் இறைவனிடம் துவா செய்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter