பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தினந்தோறும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக மகப்பேறு தொடர்பான சிகிச்சைகளுக்காக ஏராளமானோர் வருகைபுரிகின்றனர். சராசரியாக ஒருநாளைக்கு 3 முதல் 10 குழந்தைகள் இந்த மருத்துவமனையில் பிறக்கின்றன. இந்நிலையில், மக்களின் தேவையை கருத்தில் கொண்டு பட்டுக்கோட்டையில் மகப்பேறு பிரிவுக்கென ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடத்தினை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கா.அண்ணாதுரை பார்வையிட்டு திட்டத்திற்கான ஏற்பாட்டு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளரும் அதிரை முன்னாள் சேர்மனுமான எஸ்.எச்.அஸ்லம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேம்படும் பட்டுக்கோட்டை! மகப்பேறுக்கு தனிக்கட்டிடம்!! எம்.எல்.ஏ ஆய்வு!
42