Home » BIG BREAKING : சீனாவில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது.

BIG BREAKING : சீனாவில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது.

by
0 comment

பாதுகாப்புடன் இருக்க சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல் .

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பிஎப் 7 எனப்படும் இந்த வைரஸ் மற்ற இடங்களில் பரவுவதை விட சீனாவில் வேகமாகப் பரவுகிறது. தற்போதைய மாறுபாட்டிற்கு உட்பட்ட வைரசால் நோய்வாய்ப்பட்ட ஒருவர், சராசரியாக 16 பேருக்கு நோயை பரப்புவதாக சீன தேசிய சுகாதார ஆணையத்தின் விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சில நாட்களாக மயானங்களில் இறந்தவர்களின் உடல்கள் வருவது அதிகரித்தபடியே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் நிரம்பி வழிகிறார்கள். இதேபோல் உலகின் பல நாடுகளில் இந்தவகை கொரோனா மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரு நாளில் ஜப்பானில் 1.85 லட்சம், கொரியாவில் 87,559, பிரான்சில் 71,212, ஜெர்மனியில் 52,528 உட்பட உலகம் முழுவதும் 5,59,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. குஜராத்தில் 2 மற்றும் ஒடிசாவில் ஒருவருக்கு மிக்ரான் BF 7 வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது..

இந்நிலையில் சீனாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஒமிக்ரான் BF 7’ உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. குஜராத்தில் 2 மற்றும் ஒடிசாவில் ஒருவருக்கு மிக்ரான் BF 7 வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. முன்னதாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன். தமிழகத்தில் ஒமிக்ரான் போன்ற தொற்று பாதிப்புகள் இல்லை. சீனாவில் தற்போதுகூட கொரோனா தொற்று அதிகரித்துவந்தாலும் தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்துகொண்டுவருவதாக கூறினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter