
டாக்டர் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாம் மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெம்மேலி ஊராட்சியில் நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கா.அண்ணாதுரை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்திருக்க கூடிய மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். மருத்துவமும் கல்வியும் இரண்டு கண்கள் போன்றது என கூறிய கா.அண்ணாதுரை, மதுக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதை சுட்டிக் காட்டினார். இந்த நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.