23
அதிரையின் பிரதான சாலைகளில் ஒன்றான சி.எம்.பி லைன் சாலையை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவந்தனர். இதனிடையே ஊராட்சி ஒன்றிய சாலையாக இருந்த எம்.பி.லைன் சாலையை தரம் உயர்த்தும் வகையில் தமிழ்நாடு நெடுஞ்சாலையின் நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் பிரிவின் கீழ் கொண்டு வந்து மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. இதனையடுத்து முதற்கட்டமாக அந்த சாலைக்கான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு தற்போது ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தப்புள்ளியின் கடைசிநாளாக வரும் ஜனவரி 19ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.