Home » இஸ்லாமும் தமிழும் போற்றுகிற இல்லறவாழ்வு! அதிரை மணமக்களுக்கு பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ வாழ்த்து!!

இஸ்லாமும் தமிழும் போற்றுகிற இல்லறவாழ்வு! அதிரை மணமக்களுக்கு பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ வாழ்த்து!!

by அதிரை இடி
0 comment

அதிரை செக்கடி பள்ளியில் நடைபெற்ற மு.செ.மு இல்ல திருமண விழாவில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை தெற்கு திமுக மாவட்ட செயலாளருமான கா.அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம், வர்த்தகர் அணி மாநில துணை தலைவர் பழஞ்சூர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய கா.அண்ணாதுரை, இஸ்லாம் மார்க்கத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் ஆடையாகத் திகழ்கிறார்கள் என திருக்குரானில் கூறப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார். இல்லறத்தின் சிறப்பை இஸ்லாம் மார்க்கம் சிறப்பாக குறிப்பிடுவதாக கூறிய அவர், அதுபோன்று நம்முடைய தமிழ் மரபும் “இல்லறமல்லது நல்லறமன்று” என்றும் அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை” என்றும் சிறப்பித்து கூறுவதாக தெரிவித்தார்.

யாயும் ஞாயும் யாராகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல்நீர் போல, அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே! எனும் அகநாநூற்று பாடல் இல்லறத்தை சிறப்பதாக கூறினார்.

என்னுடைய தாய் யாரோ, உன்னுடைய தாய் யாரோ, என்னுடைய தந்தையும், உன்னுடைய தந்தையும் உறவினர்கள் இல்லை. நான் வந்த வழிவேறு நீ வந்த வழிவேறு செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் எப்படி அந்த நிலத்தோடு கலந்து சிவப்பு நிறமாக மாறுகிறதோ அப்படி மணமகனும் மணமகளும் இரண்டற கலந்து இல்வாழ்வு வாழ வேண்டும் என்பது அதன் பொருள். அந்த வகையில் இஸ்லாமும், தமிழ் மரபும் போற்றுகின்ற இல்வாழ்வை இனிதாக வாழ மணமக்களை வாழ்த்துகிறேன் என்று கா.அண்ணாதுரை தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter