பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை காலம் என்பதால் அதிரையில் காலை, மாலை, இரவு என திருமணங்கள் நடைபெற்று வருகிறது. தொடர் விருந்து உபசரிப்புகளில் அட்டவணை போட்டு உறவுக்காரர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்றையதினம் அதிரை செக்கடி பள்ளியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் வழக்கத்திற்கு மாறாக நிக்காஹ் முடிவதற்கு முன்னரே நார்சாவை திருமணவீட்டார் விநியோகம் செய்தனர். பள்ளி வளாகத்திற்குள் நுழையும் அனைவருக்கும் வாசலில் நின்று வரவேற்று நார்சாவை குடும்பத்தினர் வழங்கினர். இதன் காரணமாக திருமணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நார்சா கிடைத்ததுடன் நிக்காஹ் முடிந்த கையோடு மணமக்களுக்கு வாழ்த்துக்களை கூறிவிட்டு அனைவரும் விரைவாக கலைந்து வீடு திரும்பினர். இந்த செயல்முறை காரணமாக பரபரப்புகள் ஏதுமின்றி அனைவருக்கும் நார்சா விநியோகம் செய்யப்பட்ட விதத்தை திருமணத்தில் பங்கேற்றோர் வெகுவாக பாராட்டினர்.
அடடா! திருமணத்தில் இப்படி ஒரு முறையா!! ஆச்சரியப்பட்ட அதிரையர்கள்!
173
previous post