ஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்பதால் அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை அனுப்ப முடியாது என இண்டெர்போல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இஸ்லாமிய மதபோதகரான ஜாகிர் நாயகின் பிரச்சார கூட்டங்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அவரின் தொண்டு நிறுவனத்தை சட்ட விரோத அமைப்பு என கூறி அதற்கும், 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. இதனால் அவர் வெளிநாடுகளில் தங்கி வருகிறார். ஜாகிர் நாயக் பேசிய வீடியோக்களை ஆய்வு செய்த தேசிய புலனாய்வு துறையினர், அவர் மீது ரெட் கார்னர் நோட்டிஸ் அனுப்ப வேண்டும் என சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலுக்கு கடிதம் எழுதினர். அவற்றை ஆய்வு செய்த இண்டெர்போல், ஜாகிர் நாயக் மீது இந்தியா சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும், அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸை அனுப்ப முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
மாலை முரசு