அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருக்கின்ற மின்விளக்குகள் இரவில் எரிகிறதோ இல்லையோ,பகலில் நன்றாக பிரகாசமாக எரிகிறது.இதனால் தேவையில்லாத மின்விரயங்களாகின்றன.உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் கேட்பாரின்றி இருப்பதே இதற்கெல்லாம் காரணமாக பார்க்கப்படுகிறது.