அதிராம்பட்டினம் இமாம் ஷாபி மெட்ரிக் மேல்நிலை பள்ளி நிர்வாகம் சார்பில் இன்று காலை 5 கிலோ மீட்டருக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்டு ஓடினர்.
5 கிலோ மீட்டர் தொலைவுக்கான ஓட்டத்தில் 60வயதை கடந்த வழக்கறிஞர் MMS சகாபுதீன்அவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.
இவர் மறைந்த மாயவரம் சட்டமன்ற உறுப்பினர் MMS அபுல்ஹசன் அவர்களின் புதல்வர் என்பது கூடுதல் சிறப்புக்குரிய விஷயமாகும். இதுகுறித்து சகாபுதீன்அவர்கள் கூறுகையில் இன்றைய இளைஞர்கள் டிஜிட்டல் விளையாட்டை விட்டு விட்டு பிசிக்கல் விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அவர்களின் தேகம் மெருகேறும் என்கிறார்.
“நமது இளைஞர்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது அவர்கள் அன்றாடம் உபயோக்கிம் செல்போன்கள் தான் ஆதலால் செல்போனை தேவைக்கு மட்டுமே உபயோகப்படுத்தி உடல் ஆரோக்கியத்திற்கு களமாடி இயங்குவதை தவிர வேறில்லை என்கிறார்.”