Home » மரணித்த மனித உடலில் இருந்து உரம் – அமெரிக்கா ஒப்புதல் – விவசாயத்திற்கும் ஏற்றதாம்….

மரணித்த மனித உடலில் இருந்து உரம் – அமெரிக்கா ஒப்புதல் – விவசாயத்திற்கும் ஏற்றதாம்….

by
0 comment

மனித உடலில் உயிர் உள்ள வரை தான் நம்மால் இயங்க முடியும் உயிர் போன பிறகு யாருக்கும் எந்த பயனும் இல்லாதவகையில் நாம் மாறிவிடுவோம், ஆனால் உடல் உறுப்பு தானம் செய்தவர்களால் பயன் உண்டு மற்றபடி அனைத்து உடலும் எரிக்கவோ அல்லது புதைக்கவோ தான் செய்வார்கள் இதனால் எந்த பயனும் இல்லை,

ஆகவே இறந்தபின்னும் மனித உடலை உரமாக்கி பயன்பெறலாம் என்ற வகையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணம் இந்த செயல் முறையை அதிகார பூர்வமாக ஒப்புதல் வழங்கி செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. அமெரிக்காவிற்கு இது புதிதல்ல ஏற்கனவே 2019ஆம் ஆண்டில் வாஷிங்க்டன் இந்த செயல்முறையை சட்டபூர்வமாக்கியது ஆகவே அதனை தொடர்ந்து கொலராடோ, ஓரிகான், வெர்மான்ட் மற்றும் கலிபோனியா போன்ற நகரங்கள் இந்த செயல்முறையை பின்பற்ற தொடங்கின.

தற்போது இந்த நகரப்பட்டியலில் இணைந்துள்ளது நியூயார்க். தற்போது, நியூயோர்க்கில் மனித உடலை உரமாக்கும் செயல்முறையை பின்பற்ற அம்மாகாணத்தின் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் சனிக்கிழமை அதிகாரபூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளார். அமெரிக்கமாகாண பட்டியலில் புதிதாக இணைந்துள்ளது நியூயார்க். மனித உடலை, மரக்கட்டைகள், குதிரை மசால், வைக்கோல், புல் போன்ற பொருட்களை கொண்டு மூடிய பாத்திரத்தில் வைத்துவிடுவார்கள்.

அதனை தொடர்ந்து நுண்ணுயிர் செயல்பாடுகளுக்கு பின், மக்கிப்போன தசையில் இருந்து எந்தவொரு தொற்றும் ஏற்படாத வகையில் வெப்பமூட்டும் செயல்முறை செய்யப்படுகிறது.

அந்த மண், இறந்தவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்படும். அதை பெற்றபின் அவர்கள் இறந்தவர்களின் நினைவாக அந்த மண்ணை பயன்படுத்தி பூக்கள், பழவகைகள், காய்கறிகள், மரம் போன்றவற்றை நடுவதற்க்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

ரீகம்போஸ் என்ற அமெரிக் நிறுவனம் மனித உடலை உரமாக மாற்றும் செயல்முறை குறித்து கூறியதாவது, மனித உடலை எரிப்பது அல்லது புதைப்பது மூலம் ஏற்படும் டன் கணக்கிலான கார்பன் வெளியேற்றத்தை இது கட்டுப்படுத்தும் என தெரிவித்துள்ளது. மனித உடல்களை உரமாக்கும் முறை ஏற்கனவே ஸ்வீடன் முழுவதும் சட்டப்பூர்வமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter