Home » 2 கோடி பார்வையாளர்களை கடந்த அதிரையரின் யூடியூப் சேனல்!!

2 கோடி பார்வையாளர்களை கடந்த அதிரையரின் யூடியூப் சேனல்!!

0 comment

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சாகுல் ஹமீத் வயது 24. அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த இவருக்கு டிஜிட்டல் மீடியாக்களின் மீது அளவிற்கு அதிகமான ஈர்ப்பு ஏற்பட்டது. இதன் காரணத்தினால் சாகுல் ஹமீத் தனது பெயரில் YouTube சேனல் ஒன்றை உருவாக்கினார். ஆரம்ப காலகட்டங்களில் கிடைக்கக்கூடிய சிறு சிறு வீடியோ பதிவுகளை வெளியிட்டு வந்த இவர் தொடர்ச்சியாக வீடியோ பதிவுகளை பதிந்து வந்தார்.

தொடர்ந்து விடியோ பதிவுகள், நேரலைகள் மூலம் Content Create செய்து வந்த சாகுல் ஹமீதை கேளி கிண்டல்களும் பின்தொடர ஆரம்பித்தன.

என்னதான் புது புது Content களில் வீடியோ பதிவுகளை கொடுத்தாலும் ஒரு சிலரின் கேளி கிண்டல்கள் இவருடைய மனதிலும் சிறு உராய்வுகளை ஏற்படுத்தியது. எனினும் தனது குடும்பத்தினர்கள், நண்பர்கள் கொடுக்கும் ஆதரவுகளை முன் வைத்து முன்பை விட அதி தீவிரமுடன் தனது சேனலுக்காக உழைத்தார்.

இதன் முதல் வெற்றியாக 50 ஆயிரம் (Subscriber)களை கடந்து அடுத்த நான்கு நாட்களிலே ஒரு லட்சம் சந்தாதாரர் (Subscriber)களையும், 2 கோடி பார்வையாளர்களையும் தன்னுடைய சேனல் பக்கம் கவர்ந்திழுத்திருப்பது இவரின் தீவிர உழைப்பிற்கு கிடைத்த அங்கிகாரம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தொடர்ந்து பல்வேறு கோணங்களில் வீடியோ பதிவுகளை வெளியிட்டு அதிரை வரலாற்றில் மில்லியன்களை கடந்த யூடியுப் சேனல் என்கிற பெருமையை பெற்றிட சாகுல் ஹமீத் Shahul Vlog யூடியூப் சேனலை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது “அதிரை எக்ஸ்பிரஸ்” செய்தி குழுமம்.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter