தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன்(TNCA) சார்பில் 14 வயது முதல் 24 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கான ‘TALENT SCOUT’ வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதன்மூலம் 14-24 வயது வரையிலான வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை திருச்சி சாரனாதன் பொறியியல் கல்லூரியில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வீரர்களுக்கான தேர்வு நடைபெற்றது. சுமார் 1000 வீரர்கள் பங்கேற்ற தேர்வில், 50 பேர் முதற்கட்டாமாக தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் நடைபெற்ற இறுதி வீரர்கள் தேர்வில் மொத்தம் 13 பேர் சென்னையில் நடைபெற உள்ள இறுதிகட்ட வீரர்கள் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இன்று தேர்வான 13 வீரர்களில், 17 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் அதிரை ABCC அணியைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் அஹமது ஜக்கரியா (த/பெ ஜூல்கிப்ளி அஹமது) என்ற வீரரும், 16 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் மல்லிப்பட்டினம் FSC அணியைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஆபித் அஹமது(த/பெ ஜெய்னுல் ஆப்தீன்) என்ற வீரரும் தேர்வாகியுள்ளனர். இவர்கள் இருவரும் வரும் மே மாதம் சென்னையில் நடைபெற உள்ள இறுதி வீரர்கள் தேர்வில் பங்கேற்பார்கள். TNCA நடத்திய ‘TALENT SCOUT’ வீரர்கள் தேர்வில் தேர்வாகியுள்ள இவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ABCC அணி வீரர் அஹமது ஜக்கரியா

FSC அணி வீரர் ஆபித் அஹமது