Home » அதிராம்பட்டினம்,பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்த செகந்திராபாத்-ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு!

அதிராம்பட்டினம்,பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்த செகந்திராபாத்-ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு!

0 comment

செகந்திராபாத்தில் இருந்து சென்னை மார்க்கத்தில், திருவாரூர், திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி வழியாக ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில் கடந்த சில மாதங்களாக இயக்கப்பட்டு வருகிறது. வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வந்த இந்த சிறப்பு ரயிலுக்கு, பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வந்தது. அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி போன்ற பகுதிகளில் இருந்து சென்னையில் இருந்து வருவதற்கும், சென்னை செல்வதற்கும் நேரடி ரயிலாக இந்த செகந்திராபாத்-ராமேஸ்வரம் சிறப்பு ரயில் இருந்து வந்தது.

பாம்பன் ரயில் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், கடந்த இரு மாதங்களாக செகந்திராபாத்-ராமநாதபுரம் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது செகந்திராபாத்-ராமநாதபுரம் இடையே மேலும் நான்கு மாதத்திற்கு சிறப்பு ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

செகந்திராபாத் – ராமநாதபுரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 07695)

ராமநாதபுரம் – செகந்திராபாத் சிறப்பு ரயில் (வண்டி எண் 07696)

அதன்படி வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இயங்கிய அதே நேரம், கால அட்டவணைப்படியே இந்த ரயில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ரயிலுக்கான முன்பதிவும் ஆரம்பமாகிவிட்டது.

மேலும் திருவாரூர் – காரைக்குடி வழித்தடத்தில் இயக்குவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள தாம்பரம்-செங்கோட்டை வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரயில், எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில், காரைக்குடி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றையும் விரைந்து இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கங்கள், ரயில்வே ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SC – RMD Time Table

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter