
அதிரையை சேர்ந்த நூருல் இப்னு ஜகபர் அலி சன் நியூஸ் உள்ளிட்ட முன்னணி காட்சி ஊகடங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது ஒன் இந்தியா இணையதளத்தில் உதவி ஆசிரியராக பணியில் உள்ள அவர், சமூகத்தில் நிலவும் அவலங்கள் குறித்தும் எழுதி வருகிறார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத முகவரியில்லாத சிலர் நூருல் மீது சமூக ஊடகங்களில் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர். இந்நிலையில் தன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பும் தமிழ்நேசன் எனும் போலி ஐடி குறித்து சைபர் கிரைமில் நூருல் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், அதிரை சேவகனின் மீடியா என்ற போலி ஐடி வெளியிட்ட பதிவிற்கு கீழ் என்னையும் எனது சகோதரனையும் எனது தாய் மாமாவையும் தரக்குறைவாக விமர்சித்த Tamilnesan என்ற போலி ஐடி மீது சைபர் பிரிவில் புகாரளித்துள்ளேன். வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் என்னை பற்றி அவதூறாக வரும் பதிவுகளை தொடர்ந்து கவனித்து வருகிறேன். பாரபட்சம் இன்றி புகார்கள் தொடரும். என குறிப்பிட்டுள்ளார்.