


அதிரையில் அருள்மிகு ஆதிபராசக்தி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர். இந்நிலையில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் அலுவலகம் சார்பில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சமூக நல்லிணக்கத்தை பறைச்சாற்றும் விதமாக மாவட்ட செயலாளர் கா.அண்ணாதுரையின் அறிவுறுத்தலினின்படி கோவில் விழாவில் பங்கேற்றவர்களுக்கு ரோஸ்மில்க் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பொருளாளரும் முன்னாள் அதிரை சேர்மனுமான எஸ்.எச்.அஸ்லம் செய்திருந்தார். இதனையடுத்து அஸ்கர், பொறியாளர் புஷ்பராஜ், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் கிருபா, திருப்பதி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்ற 600க்கும் மேற்பட்டோருக்கு ரோஸ்மில்க் வழங்கினர். இதனிடையே ஆறுமுககிட்டங்கி தெரு கிராம பஞ்சாயத்து சார்பில் எஸ்.எச்.அஸ்லமிற்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தனர்.